kids favourite Chocolate balls recipe Kitchen Keerthana

கிச்சன் கீர்த்தனா : சாக்லேட் பால்ஸ்

தமிழகம்

குழந்தைகளுக்குப் பிடித்த உணவைத் தயாரித்துக் கொடுப்பது சற்று சிரமமான விஷயம்தான். அந்த வகையில் எளிதாகச் செய்யக்கூடிய இந்த சாக்லேல் பால்ஸ் குழந்தைகளை மட்டுமல்ல… வீட்டிலுள்ள அனைவரையும் குஷிப்படுத்தும்; கொண்டாட வைக்கும்.

என்ன தேவை?

பொடித்த சர்க்கரை – அரை கப்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
கோகோ பவுடர் – 3 டீஸ்பூன்
பால் பவுடர் – அரை கப்
பால் – ஒரு டீஸ்பூன்
சீரக மிட்டாய் அல்லது ஜெம்ஸ் மிட்டாய் – அலங்கரிக்க (விருப்பப்பட்டால்)
சாக்கோ சிப் – சிறிதளவு (விருப்பப்பட்டால்)

எப்படிச் செய்வது?

பால் தவிர்த்து மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும். அதனுடன் பால் கலந்து உருண்டைகளாக உருட்டவும். சீரக மிட்டாய் அல்லது ஜெம்ஸ் மிட்டாய் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு:  பால் பவுடர் கலந்ததும் மாவு ஈரப்பதத்துடன் இருந்தால், அதாவது உருட்டும் பக்குவத்தில் இருந்தால் பால் சேர்க்கத் தேவையில்லை. உருண்டை பிடிக்கும்போது உள்ளே ஒரு சாக்கோ சிப் வைத்தும் உருண்டை பிடிக்கலாம்.

புத்தாண்டு முதல் ‘டயட்’டைக் கடைப்பிடிக்கப் போறீங்களா?

மில்க் கோகோனட் பால்ஸ்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *