ஆட்டோவில் இளம்பெண் கடத்தல் : கிளாம்பாக்கம் டூ நெற்குன்றம் வரை திக் திக் : என்ன நடந்தது?

Published On:

| By Kavi

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 18 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Kidnapping of young woman in auto

இந்தியாவில் சென்னை, பெண்களுக்கு பாதுகாப்பு நகரமாக பார்க்கப்படுகிறது. ஆனால் சமீப நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் அதற்கு எதிர்மாறாக உள்ளன.

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை, ஈசிஆர் சாலையில் பெண்கள் துரத்தப்பட்டது ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து, கிளாம்பாக்கத்தில் இளம் பெண் ஒருவர் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பெண் சேலத்தில் தங்கி பணியாற்றி வருகிறார்.
சென்னை மாதவரத்தில் இவரது உறவினர்கள் தங்கியுள்ளனர். அவர்களை காண்பதற்காக நேற்று முன்தினம்(பிப்ரவரி 3) காலை சேலத்தில் இருந்து சென்னை கிளம்பி வந்துள்ளார்.

இனி பஸ் வராது… ஆட்டோவில் ஏறு! Kidnapping of young woman in auto

Kidnapping of young woman in auto

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அன்று இரவு இறங்கிய அப்பெண், வெளியில் உள்ள மாநகர பேருந்து நிலையத்துக்கு வந்து மாதவரம் செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தார்.

நீண்ட நேரம் ஆகியும் பேருந்து வரவில்லை. இரவு நேரத்தில் தனியாக நின்றுக்கொண்டிருந்த பெண் அருகே வந்து நின்ற ஆட்டோ ஓட்டுநர், ‘இரவு நேரமாயிடுச்சுமா… இனி பஸ்ஸுலாம் வராது… நான் மாதவரம் தான் போறேன்… வாங்க அங்கே இறக்கிவிட்டுவிடுறேன்’ என்று கூறியிருக்கிறார்.

அந்த பெண் ஏற மறுக்க வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஆட்டோவில் செல்லும் போது ஓட்டுநர், அவர்களது நண்பர்களுக்கு போன் செய்திருக்கிறார். இந்தசூழலில் வழியில் இரண்டு பேர் ஆட்டோவில் ஏறி பெண்ணின் இருபுறமும் உட்கார்ந்தனர்.

ஆட்டோ ஜிஎஸ்டி சாலை மற்றும் இரும்புலியூர் சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் போது கத்தியை காட்டி மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

அப்போது அப்பெண் உதவி கேட்டு கத்தி கூச்சலிட்டதால், அருகில் இருந்தவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர்.

துரத்திய போலீஸ்…. தப்பிய ஆட்டோ! Kidnapping of young woman in auto

இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து ஒரு போலீஸ் டீம் பேட்ரோல் வாகனத்தில் அந்த ஆட்டோவை துரத்திச் சென்றது.

ஆனால் ஆட்டோ நெற்குன்றத்தில் ஒரு குறுகிய தெரு வழியாக தப்பிச் சென்று, அங்கு அந்த பெண்ணை மூவரும் கீழே இறக்கிவிட்டு, அவரது உடைமைகளை தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர்.

அப்போது அவ்வழியாக சென்ற திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மோகன், அவ்வழியே வர அந்த ஆட்டோவில் ஏறிய இளம்பெண் நடந்ததை விவரித்துள்ளார்.

மோகன், அப்பெண்ணை கோயம்பேடு அருகே உள்ள மாதா கோயில் தெரு வழியே அழைத்துச் சென்றுக்கொண்டிருந்த போது, ரோந்து வாகனத்தில் வந்த போலீசார் அவரை மீட்டனர்.

இதற்கிடையே அந்த இளம்பெண் தனது தோழிக்கும், தான் ஆபத்தான நிலையில் இருப்பதை குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அவரது தோழி போலீஸுக்கு தகவல் தெரிவித்ததாகவும் தகவல்கள் வருகின்றன.

பாதிக்கப்பட்ட அப்பெண் அளித்த புகாரின் பேரில், பல்லாவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் கடத்தல்காரர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

கிளாம்பாக்கத்தில் இருந்து ஆட்டோ சென்ற வழியாக இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர்.

ஆட்டோ ஓட்டுநர் உதவி! Kidnapping of young woman in auto

Kidnapping of young woman in auto
மோகன்

பாதிக்கப்பட்ட பெண்ணை நெற்குன்றத்தில் இருந்து ஆட்டோவில் ஏற்றி வந்த ஓட்டுநர் மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அந்த பெண் ஆட்டோவில் கடத்தி வரப்பட்டது எல்லாம் எனக்கு தெரியாது. நான் ரேப்பிடோ பிக் -அப்பை டிராப் செய்துவிட்டு ரிட்டன் வரும் போது ஒருவர் எனது ஆட்டோவை நிறுத்தி, கோயம்பேடு போகுமா என கேட்டு அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றிவிட்டார்.

அந்த பெண்ணிடம் 200 ரூபாய் ஆட்டோ ஓட்டுநருக்கு கொடுத்துவிடு என்று இந்தியில் கூறினார்.
முதலில் அந்த பெண் ஆட்டோவில் ஏறவில்லை. எனக்கு இந்தி தெரியுமா என்று கேட்டார். தெரியும் என்று சொன்னவுடனே தான் ஆட்டோவில் ஏறினார். ஏறியதும் சில நொடிகளில் அழ ஆரம்பித்துவிட்டார்.

என்ன நடந்தது என்று கேட்டேன். என்னை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து போக முடியாமா? என்று கேட்டார். இதையடுத்துதான் போலீஸிடம் ஒப்படைத்தேன்” என்று கூறியுள்ளார்.

நள்ளிரவில் நடந்த இந்த திக் திக் சம்பவம் சென்னையில் பெண்களின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கியுள்ளது.

இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட வேண்டும்?

Kidnapping of young woman in auto

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஒரு தினசரி பயங்கரமாக மாறிவிட்டது.

போதைபொருள்கள் எளிதாக கிடைக்கிறது. 2022லிருந்து 2024 வரை, தமிழ்நாட்டில் போதைப்பொருள்தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,122 மட்டுமே. கடந்த 2021ல் மட்டும், போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,632 ஆகும்.

தமிழகத்தில் கஞ்சா மற்றும் மெத்தம்பேட்டமைன் விற்பனை அதிகரித்து வருகிறது, ஆனால் கைது எண்ணிக்கை குறைந்துள்ளது. எப்படி?

போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை தமிழ்நாடு அரசு சுதந்திரமாக நடமாடவிடுகிறதா? இன்னும் எத்தனை சகோதரிகள் பாதிக்கப்பட வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எப்போதும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வியும் தவிர்க்க முடியாதது. Kidnapping of young woman in auto

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share