எழுத்தாளர்களுக்கு செய்ய வேண்டிய உரிய மரியாதையை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
இன்று (நவம்பர் 2) கோவில்பட்டியில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் நினைவாக சிலையுடன் கூடிய நினைவரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கி.ராஜநாராயணனின் நினைவரங்கத்தில் கலை இலக்கிய மாலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், பூமணி, சோ.தர்மன், கோணங்கி, பவா செல்லத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்.பி, “கேரள மாநிலத்தில் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுவது போல, தமிழகத்தில் கொண்டாடப்படவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. ஆனால் தற்போது, எழுத்தாளர்களுக்கு செய்ய வேண்டிய நியாயமான மரியாதையை தமிழக அரசு சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. இலக்கியவாதியான கி.ரா அவர்கள் எப்பொழுதுமே மனிதர்களை நேசிக்கக்கூடிய ஒருவர்.
அவருடைய நினைவைப் போற்றக்கூடிய நிகழ்ச்சியில் கட்சி பேதமின்றி கலந்து கொண்டிருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களுக்கு என்னுடைய அன்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பல பேர் எழுதுவதற்கு காரணமாக இருந்த கி.ரா அவர்களுக்கு மரியாதை செலுத்தக்கூடிய வாய்ப்பைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி தந்துள்ளார்.” என்றார்.
செல்வம்
கோவில்களில் செல்போனுக்கு தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Comments are closed.