கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு கார அடை
காலையில் சத்தான உணவைச் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவு இந்த கேழ்வரகு கார அடை. கேழ்வரகில் கால்சியம் நிறைவாக உள்ளதால் குழந்தைகள், எடை அதிகரிக்க விரும்புகிறவர்களுக்கு ஏற்ற சிற்றுண்டியாக அமையும்.
என்ன தேவை?
கேழ்வரகு மாவு – ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப்
உப்பு, எண்ணெய் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் விழுது ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்து, வெங்காயத்தை வதக்கி, உப்பு சேர்த்து நீர் விடவும். நன்கு கொதிவந்ததும் கேழ்வரகு மாவைப் போட்டு கைவிடாமல் கிளறி, நன்றாக வேகவைக்கவும். தவாவில் எண்ணெய்விட்டு, இதை அடையாகத் தட்டி, சுற்றிலும் எண்ணெய் விட்டுத் திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
அடிக்கடி 750 மில்லி ஜூஸ் குடிப்பவரா நீங்கள்?