கிச்சன் கீர்த்தனா : கீரை பணியாரம்

தமிழகம்

விதம் விதமாக, வித்தியாசமாகத் தேடிப்பிடித்துச் சமைப்பதில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? உங்கள் தேடலுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து உங்கள் விருப்பப்படி வித்தியாசமான விருந்து படைக்க இந்தக் கீரைப் பணியார ரெசிப்பீஸ் உதவும்.

என்ன தேவை?

சிறுகீரை –  ஒரு கட்டு
தோசை மாவு – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு,
உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
(தோசைமாவில் உப்பு இருப்பதால் உப்பு தனியாக சேர்க்கத் தேவையில்லை)

எப்படிச் செய்வது?

பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கி வைக்கவும். சிறுகீரையை கழுவி இரண்டு கைப்பிடி அளவுக்கு பொடியாக நறுக்கி எடுத்துகொள்ளவும்.

இரண்டு கரண்டி தோசை மாவில் நறுக்கிய கீரையைக் கலந்து மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்து, இதை மீதமுள்ள மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு தாளித்து உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்துச் சிவந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி கொத்தமல்லித்தழை,  கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

தாளித்த கலவையை மாவில் சேர்த்து நன்கு கலக்கி, அடுப்பில் பணியாரக் கல்லை வைத்து சிறிதாக எண்ணெய் விட்டு சூடானதும், மிதமான தீயில் வைத்து பனியாரம் ஊற்றி திருப்பிவிட்டு, இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்.

குறிப்பு:

அரைக்கீரை, முளைக்கீரை, பாலக்கீரையிலும் பணியாரம் செய்யலாம். பச்சையாகக் கீரையை அரைத்துச்செய்வதால் சத்துகள் வீணாகாது. கீரையைத் தனியாக அரைத்தால் தோசை மாவில் தண்ணீர் அதிகமாகிவிடும். எனவே, தோசை மாவை சேர்த்தே அரைக்கவும்.

அகத்திக்கீரை குழம்பு

அரைக்கீரை பக்கோடா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *