காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 33,420 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் காவிரியின் உபநதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 9,644 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று (அக்டோபர் 11) காலை வினாடிக்கு 20,626 கன அடியாக நீர்வரத்து அதிகரித்திருந்தது.
இன்று (அக்டோபர் 12) காலை மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 33,420 கன அடியாக அதிகரித்துள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் அணையின் உபரிநீர் போக்கி கால்வாய் அமைந்துள்ள தங்கமாபுரிபட்டினம், அண்ணா நகர், பெரியாா் நகா்
ஆகிய பகுதிகளில் நள்ளிரவில் வருவாய்த் துறையினர் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடப்பாண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டவுள்ளது.
ஆகையால் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அணையின் இடது கரையில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் முகாமிட்டு 24 மணிநேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனமழை காரணமாக மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடி திறந்து விடப்பட்டதால் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதிங்க…!
அதிக மழை பெய்தாலும் மின் விநியோகம் பாதிக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி