கடந்த 1986-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. அப்போது நெல்லை மாவட்டத்திற்கு கட்டபொம்மன் மாவட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது.
மேலும், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குறை தீர்ப்பு மன்ற கூட்ட அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் கட்டபொம்மன் சிலை நிறுவப்பட்டது. இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக கூட்ட அரங்கில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதன் காரணமாக, கட்டபொம்மன் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.
இந்தநிலையில், புனரமைப்பு பணிகள் முடிந்து, மீண்டும் கட்டிடம் பயன்பாட்டிற்கு வந்த பிறகும், கட்டபொம்மன் சிலை அங்கு நிறுவப்படவில்லை. இதற்கு இந்து முன்னணி, விடுதலைக் களம் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
குறிப்பாக விடுதலைக் களம் கட்சியின் தலைவர் நாகராஜன் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் மனு அளித்துள்ளார்.
அதில், கட்டபொம்மன் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், நாளை (ஜூலை 29) மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். இந்தநிலையில், ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் சிலை நிறுவப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையில், போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக நாகராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், நெல்லை மாவட்டத்தில் பணிபுரியும் வருவாய்த்துறை ஊழியர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுப்பதாக, வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து அலுவலகத்திற்கு சென்றனர்.
இந்தநிலையில், ஜூலை 22-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து ஜூலை 25-ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் ஒட்டுமொத்த விடுப்பில் சென்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். தொடர்ச்சியாக நெல்லை கலெக்டருக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருவதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
செல்வம்
Paris Olympics 2024: இந்தியாவின் பதக்க வேட்டை ஸ்டார்ட்… வெண்கலத்தை தட்டித்தூக்கிய மனுபாக்கர்
பட ப்ரமோஷன்களில் எஸ்கேப்… நடிகர்களுக்கு ஆர்.கே.செல்வமணி செக்!