தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று ரசவாங்கி. எளிதாகச் செய்யக்கூடிய இந்த கத்திரிக்காய் ரசவாங்கியை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம்.
என்ன தேவை?
கத்திரிக்காய் – 250 கிராம்
தனியா – 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
புளி – நெல்லிக்காய் அளவு
தேங்காய் துருவல் – ஒரு கப்
வெல்லம் – சிறிதளவு
கடுகு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி… உப்பு சேர்த்து, புளியை கரைத்து விட்டுக் கொதிக்க விடவும். தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை வறுத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, வேக வைத்திருக்கும் கத்திரிக்காயுடன் சேர்க்கவும். பிறகு, வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.