இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை!

தமிழகம்

கரூர் மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கெந்தப் பொடிக்கார தெருவைச் சேர்ந்த வெங்கடேசன்,  நிஷாந்தி தம்பதியினருக்கு தியாழினி என்ற நான்கு வயது மகளும், பூபன் என்ற இரண்டு வயது மகனும் உள்ளனர்.

மகள் தியாழினிக்கு, உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தியாழினுக்கு மூச்சுத்திணறல் இருப்பது தெரியவந்ததால் பெற்றோர்கள் மனமுடைந்தனர்.

இந்தநிலையில், நேற்று காலை நிஷாந்தியின் கணவர் வெங்கடேசன் மற்றும் அவரது சகோதரர் குமார் ஆகியோர் ஈரோடு மாவட்டம், அரச்சலூரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்கு தயாரானார்கள்.

அப்போது, நிஷாந்தி குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கோவிலுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். நிஷாந்தி மற்றும் அவரது இரு குழந்தைகளும் வீட்டில் இருந்துள்ளனர்.

கணவன் மற்றும் அவரது சகோதரர் கோயிலுக்குச் சென்ற பிறகு, நேற்று மாலை 4 மணியளவில் நிஷாந்தி தனது குழந்தைகளை சேலையில் தூக்கிலிட்டு தொங்கவிட்டு, தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கணவன் கோயிலுக்கு சென்ற நிலையில், வெகு நேரமாக வீடு பூட்டப்பட்டு இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து வெங்கடேஷ் மற்றும் குமார் ஆகியோருக்கு தகவல் அளித்தனர்.

இந்தச் சம்பவம்  குறித்துஅறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த நிஷாந்தி மற்றும் அவரது குழந்தைகள் ஆகிய மூன்று பேரின் உடல்களும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை தேர் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.