கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு : பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் நிபந்தனை!

தமிழகம்

கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழக மீனவரின் உடலைப் பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் நிபந்தனையுடன் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் கடந்த 14 ஆம் தேதி பரிசலில் சென்று சிலர் கர்நாடக வனப்பகுதியில் மான் வேட்டையாடினர் எனக் கூறப்படுகிறது.

இதனை அறிந்த கர்நாடக வனத்துறையினர் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பதிலுக்கு அவர்களும் நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட நிலையில் கோவிந்தபாடியைச் சேர்ந்த மீனவர் காரவடையான் ராஜா என்பவரைக் காணவில்லை.

karnataka forest department fired

நீரில் மிதந்த உடல்

காணாமல் போன ராஜாவை உறவினர்கள் தேடி வந்த நிலையில் நேற்று காலை பாலாற்றங்கரையில் அவரது உடல் உப்பிய நிலையில் மிதந்து கரை ஒதுங்கியது.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் பெருமளவில் குவிந்தனர். மேலும் ராஜா உயிரிழப்புக்கு கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது தான் காரணம் என குற்றம் சாட்டினர்.

தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ராஜாவின் உடல் மீட்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை செய்வதற்கும், உடலை வாங்கவும் மறுப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

இதற்கிடையே நேற்றிரவு கர்நாடக மாநில வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார் .

மேலும் உயிரிழந்த ராஜாவின் குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.

karnataka forest department fired

அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இரண்டாவது நாளாக இன்றும் உயிரிழந்த ராஜாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து அவர்களிடம் பயணியர் மாளிகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், எஸ்.பி. சிவக்குமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, பிரேதப் பரிசோதனை செய்வதை காணொலியாக பதிவு செய்ய வேண்டும். மேலும் பிரேதப் பரிசோதனை செய்யும் போது எங்கள் மருத்துவர் ஒருவர் உடன் இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர்.

அவற்றை ஏற்றுக்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்த நிலையில், ராஜாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

karnataka forest department fired

இதனையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு ராஜாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

பிரேதப்பரிசோதனை முடிந்தால் தான், ராஜா எவ்வாறு இறந்தார் என்பது தெரியவரும் என்பதால் தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதனால் இரு மாநில எல்லையிலும் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

கொரோனா விடுமுறை : அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

மெக்கலத்தின் பிரம்மாண்ட சாதனை : தட்டி பறித்த பென் ஸ்டோக்ஸ்

+1
1
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *