அனைத்து வைட்டமின் சத்துகளும் தாது உப்புகளும் நிறைந்துள்ள இந்த காராமணி ராகி சேவை அனைவருக்கும் ஏற்ற பிரேக் ஃபாஸ்ட். இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் அமிலங்கள், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், கால்சியம், செலினியம், சோடியம், துத்தநாகம், காப்பர் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியைத் தரும்.
என்ன தேவை?
ராகி சேவை – ஒரு பாக்கெட்
சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்)
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
காராமணி – ஒரு கைப்பிடி அளவு
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
ராகி சேவையை இரண்டு நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வெறும் வாணலியில் காராமணியை லேசாக வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வேகவைத்து எடுக்கவும். பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துச் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் வேகவைத்த காராமணி, வேகவைத்த ராகி சேவை, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக, மேலே தேங்காய்த் துருவல் தூவி இறக்கிப் பரிமாறவும். அடுப்பைச் சிறு தீயில் வைத்தே செய்யவும்.
கிச்சன் கீர்த்தனா: மிக்ஸ்டு நட்ஸ் மில்க்