கிச்சன் கீர்த்தனா : காரைக்குடி காடை ஃப்ரை

தமிழகம்

இன்று பலரும் காடையை விரும்பி சாப்பிடுவதால், சென்னை போன்ற பெருநகரங்களின் சிக்கன் கடைகளில் காடையும் விற்கப்படுகிறது. காடையில் மிகக் குறைவான கொலஸ்ட்ராலும், சிக்கனைவிடக் கூடுதல் நுண்ணூட்டச்சத்துகளும் உள்ளன. அப்படிப்பட்ட காடையை நீங்களும் காரைக்குடி ஸ்பெஷல் ரெசிப்பியாக வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.

என்ன தேவை?

முழு காடை – 400 கிராம்
சின்ன வெங்காயம் – 10
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – தலா ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – தலா 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
முட்டை – 1
எலுமிச்சைச் சாறு – ஒரு பழச்சாறு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். காடையை நன்கு சுத்தம் செய்து, அதன் இரு கால்களிலும் ஒரு கீறல் செய்யவும் (அப்போதுதான் கறி நன்றாக வேகும்).

ஒரு பவுலில் இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், கடலைமாவு, முட்டை, சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் கறிவேப்பிலை, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு கலக்கவும்.

இதில் காடையைச் சேர்த்து காடையில் மசாலா நன்கு பரவுமாறு புரட்டி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் மசாலா காடையைச் சேர்த்து நன்றாக வேகவிட்டு எடுத்தால், சுவையான காரைக்குடி காடை ஃப்ரை தயார்.

பனீர் சூப்

செட்டிநாடு முட்டைக் குழம்பு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *