இடிந்து விழுந்த காரைக்கால் மருத்துவமனை: பயந்தோடிய நோயாளிகள்!

Published On:

| By christopher

காரைக்காலில் இயங்கி வரும் ஆயுஷ் மருத்துவமனை வளாகத்தில் மேற்கூரையின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், நோயாளிகள், மருத்துவர்கள் அச்சத்துடன் வெளியேறினர்.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் ஓர் அங்கமாக, மருத்துவமனை வளாகத்தில் இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி (ஆயுஷ்) மருத்துவமனை 2011-ம் ஆண்டுக்கு முன்பு வரை இயங்கி வந்தது. பின்னர், 2018-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை காரைக்கால் பாரதியார் வீதியில், பயன்பாடற்று இருந்த நகராட்சி விடுதிக் கட்டட்டத்தில் செயல்பட்டு வருகிறது.

ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய சிகிச்சைப் பிரிவுகள், மருந்தகங்கள் தனித்தனி அறைகளில் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஏராளமானோர் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இக்கட்டடம் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளதால், வேறு இடத்துக்கு மருத்துவமனையை மாற்றம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இக்கட்டட்டத்தின் ஒரு பகுதியில் மேற்கூரையில் இருந்து சிமென்ட் காரைகள் நேற்று முன்தினம் திடீரென அதிக அளவில் பெயர்ந்து விழுந்தன. அதிக சப்தத்துடன் சிமென்ட் காரைகள் விழுந்ததால் நோயாளிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கட்டடத்தில் இருந்து விரைந்து வெளியேறினர். இந்தக் கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

எனவே, இம்மருத்துவமனைக்கு நிரந்தர கட்டடம் கட்ட வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : துணை முதலமைச்சராக உதயநிதி பதவியேற்பு முதல் இந்தியா – வங்கதேசம் 3வது நாள் ஆட்டம் வரை!

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்:  நாட்டுக்கோழி முட்டையில்தான் சத்துகள் அதிகம் உள்ளதா?

ஆவடி மாநகராட்சி லைப்ரரில அவ்ளோ வசதி இருக்குது… நீட் தேர்வில் பாஸான மாணவர் வைக்கும் கோரிக்கை!

80 டன் குண்டு வீசி ஹிஸ்புல்லா இயக்க தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொலை- இஸ்ரேல் வெறியாட்டம்!

வேலைவாய்ப்பு : NCLT- பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel