குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Published On:

| By Selvam

வார விடுமுறை நாள் என்பதால் கன்னியாகுமரியில் இன்று (ஜனவரி 8) ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தார்கள்.

நவம்பர் 15 முதல் ஜனவரி 20 வரை குமரி மாவட்டத்திற்கு சபரிமலை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள். இதனால் இந்த நாட்கள் குமரியின் சுற்றுலா சீசனாக கருதப்படும்.

அரையாண்டு தேர்வு முடிந்து சபரிமலைக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக வந்த நிலையில், இன்று வார விடுமுறை மட்டும் சபரிமலை மகரவிளக்கு பூஜை அடுத்த வாரம் வர இருப்பதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குமரி மாவட்டத்தில் குவிந்தார்கள்.

kanyakumari sunday people crowd

அவர்கள் குமரிக்கடலில் அதிகாலையில் சூரிய உதயத்தை கண்டுகளித்தார்கள். மேலும் முக்கடல் சங்கமத்தில் நீராடியும், புகைப்படமும் எடுத்தும் மகிழ்ந்தார்கள்

பின்னர் நீண்ட வரிசையில் நின்று கடற்கரையில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்கள்.

மேலும் காந்தி மண்டபம் பகுதியில் சங்கு, பாசி போன்ற வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினர். இதனால் குமரியில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

செல்வம்

எனக்காக சண்டை போட்டவர் டி.ஆர்.பாலு: நட்பை நினைவு கூர்ந்த முதல்வர்!

வேலைவாய்ப்பு : சென்னை மாநகராட்சியில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel