பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பாதிரியார் பெனடிக் ஆன்றோவை காவல்துறையினர் இன்று (மார்ச் 20) கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ. இவர் பிலாங்காலை பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் பாதிரியராக உள்ளார்.
தேவாலயத்திற்கு வரும் பல பெண்களிடம் வாட்ஸப் மற்றும் வீடியோ காலில் ஆபாசமாக பேசி பெனடிக் ஆன்றோ பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும் இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆஸ்டின் ஜினோ என்பவர் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதனடிப்படையில் பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவரை கைது செய்வதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்தநிலையில், பாதிரியார் ஆன்றோ கன்னியாகுமரியிலிருந்து வெளியூருக்கு தப்பி செல்ல முயன்றதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நாகர்கோவில் பால்பண்ணை பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்வம்