தீப்பெட்டி மூலப் பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என மக்களவையில் மத்திய அரசுக்கு திமுக எம்.பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக எம்.பியும், துணை பொதுச் செயலாளருமான கனிமொழி எம்.பி தீப்பெட்டித் தொழிலாளர்களின் அவல நிலை குறித்து மக்களவையில் பேசும்போது, “தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் என்பது நூற்றாண்டைக் கடந்த தொழில்.
ஏற்றுமதி துறையிலும் நம் நாட்டின் மிக முக்கியமான தொழில் தீப்பெட்டி தயாரிப்பு தொழில்.
ஆனால் சமீபகாலமாக தீப்பெட்டி தயாரிப்பதற்கான மூலதன பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஒரு கிலோ 40 ரூபாயாக இருந்த கார்ட்போர்டு 90 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. தீப்பெட்டி தயாரிப்புக்கு தேவையான சிகப்பு பாஸ்பரஸ் 400 ரூபாயிலிருந்து, 1,000 ரூபாயாக அதிகரித்து விட்டது.
தீப்பெட்டி தயாரிப்பு தொழில் என்பது 14 மூலப் பொருட்களைச் சார்ந்துள்ளது. இந்த அனைத்து மூலப் பொருள்களும் கடுமையாக விலை உயர்ந்து விட்டன. இதனால் தீப்பெட்டி தயாரிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனது தொகுதியான தூத்துக்குடி மாவட்டத்திலும் சுமார் பத்து லட்சம் பேருக்கு, இந்த தொழில் தான் வேலைவாய்ப்பை அளிக்கிறது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் 90 சதவிகிதம் பேர் பெண்கள்.
பின்தங்கிய பகுதியான இங்கே இவர்களின் ஒரே வாழ்வாதாரமாக இருப்பது இந்தத் தீப்பெட்டி தொழில் தான். ஒருபக்கம் மூலப் பொருட்களின் விலையேற்றத்தால் தீப்பெட்டி தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
தீப்பெட்டி மூலப் பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
-ராஜ்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ்