விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவனைக் காப்பாற்றிய கனிமொழி

தமிழகம்

திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தனது காரில் கோவையிலிருந்து திருப்பூருக்கு பயணித்தபோது அவினாசி நெடுஞ்சாலையில், லாரி விபத்தில் சிக்கித் தவித்த கல்லூரி மாணவனை, காரில் ஏற்றி சென்று மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியுள்ளார்.

கோவையில் இன்று (பிப்ரவரி 10) நடைபெற்ற 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் நிகழ்ச்சிகளில் கனிமொழி எம்.பி பங்கேற்றார். நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மதியம் 2.30 மணிக்கு கோவையில் இருந்து திருப்பூர் மார்க்கமாக காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அவருடன் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசனும் சென்றார்.

இந்தநிலையில், தனியார் கல்லூரியில் பிகாம் படித்துவரும் மாணவன் ராபின், அவிநாசி நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானார்.

அப்போது அந்த வழியாக கடந்து சென்ற கனிமொழி எம்.பி, தனது டிரைவரை உடனடியாக காரை நிறுத்தச் சொன்னார். அங்கிருந்தவர்களிடம் “108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தாச்சா?” என்று கனிமொழி பதட்டத்துடன் கேட்க “தகவல் கொடுத்தாச்சு… ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமாகிறது” என்று சொல்லியிருக்கிறார்கள்.

உடனடியாக தனது ஓட்டுநர் மற்றும் தன்னுடன் வந்தவர்களின் உதவியோடு அடிபட்டு மயக்க நிலையில் இருந்த ராபினை தனது காரில் ஏற்றிக்கொண்டு கோவையில் உள்ள பிரேமா மருத்துவமனையில் சேர்த்தார்.

முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, அடிபட்ட மாணவனுக்கு ஆறுதல் சொல்லி மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளை செய்துவிட்டு மீண்டும் திருப்பூர் நோக்கி பயணித்தார் கனிமொழி.

“கனிமொழி எம்பி செய்யும் உதவி புதியது அல்ல இதுபோல் பல உதவிகளை செய்து வருகிறார்” என்றனர் அவரது ஆதரவாளர்கள்.

-வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தள்ளிப்போகும் ஐபிஎல் தொடர்… முதல் போட்டியில மோதப்போறது இவங்க தான்!

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சுவிட்சர்லாந்து இ-மெயில் நிறுவனம் கொடுத்த துப்பு!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *