திருச்செந்தூரில் நாளை முதல் கந்த சஷ்டி விழா தொடக்கம்!

தமிழகம்

திருச்செந்தூரில் நாளை (நவம்பர் 13) முதல் கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

அந்த வகையில் இந்த முறை நாளை (நவம்பர் 13) யாக சாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. இந்த விழாவின்போது யாக சாலையில் இருந்து ஜெயந்திநாதர்  எழுந்தருளுதல், வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு முதலிய பாடல்களுடன், மேள வாத்தியங்கள் முழங்க சண்முகவிலாசம் சேர்தல், சுவாமிக்கு தீபாராதனை ஆகியவை நடைபெற உள்ளன.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவில்  பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக குடில்கள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை, திருக்கோயில் நிர்வாகம் மற்றும் திருச்செந்தூர் பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செய்து வருகின்றன. கந்த சஷ்டி விழாவை சிறப்பாக நடத்த 29 சிறப்பு பணி அலுவலர்களை இந்து சமய அறநிலையத் துறை நியமித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

உதவியாளருக்கு காயம்: மாநகராட்சி ஆணையருக்கே இந்த நிலையா?

ஹரிஷ் கல்யாணின் “டீசல்” படம் ஷூட்டிங் ஓவர்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *