கிராம வீடுகளுக்கு 100 சதவிகிதம் குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி பிரதமர் விருது பெறுகிறார்.
கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு 100 சதவிகிதம் வழங்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு ‘ஜல் ஜீவன்’ திட்டத்தைக் கொண்டு வந்தது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இதற்கென சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.

அவ்வாறு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகளுக்கு இத்திட்டத்தின் கீழ், 100 சதவிகிதம் குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக மத்திய அரசின் ‘பிரதமர் விருது’ காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 21இல் டெல்லியில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி, காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்திக்கு விருது வழங்குகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ‘ஜல் ஜீவன்’ திட்டம் தொடங்கியபின், புதிதாக 1.16 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டு மொத்தம் உள்ள 2.15 லட்சம் வீடுகளுக்கு முழுவதுமாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2022 அக்டோபரில் இத்திட்டப்பணிகள் முடிவுற்றன.

இதுமட்டுமல்லாமல், குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்ய, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள், அவ்வப்போது குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்கின்றனர்.
கிராம அளவிலான குடிநீர் மற்றும் சுகாதார கண்காணிப்பு குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இக்குழு, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் செல்வதைக் கண்காணிக்க வேண்டும். ‘பைப் லைன்’ பழுது, சீரமைத்தல் உள்ளிட்டவற்றை செய்ய இக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டு அதன்படி செயல்படுகிறது.
ராஜ்
அரசுப் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை!
சஞ்சு சாம்சன் – ஹெட்மேயர் அதிரடி: குஜராத்தை பறக்கவிட்ட ராஜஸ்தான்