கிச்சன் கீர்த்தனா: கம்பு – பாலக் கீரை வடாகம்

Published On:

| By Selvam

அப்பளம், பப்படம், கலர் சேர்த்த வற்றல்கள், வெங்காய வற்றல், தக்காளி வற்றல்  என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட வற்றல்கள்  விற்பனைக்கு வந்தாலும் நமது கைப்பக்குவத்தில் மெனக்கெட்டு  வேலை செய்து… சுகாதாரமான இடத்தில் சுத்தமாக போடும் வற்றல்களுக்கு ஈடாகுமா என்று நினைப்பவர்களுக்கு இந்த சத்தான  கம்பு – பாலக் கீரை வடாகம் ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

கம்பு மாவு – 2 கப்

அரிசி மாவு – அரை கப்

ஜவ்வரிசி – அரை கப்

பாலக்கீரை, பச்சைமிளகாய் அரைத்த விழுது – ஒரு கப்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பெருங்காயம் – கால் டீஸ்பூன்

புளித்த மோர் – ஒரு கப்

எப்படிச் செய்வது?

கம்பு மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயம், சீரகம் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் பாலக் கீரை, பச்சைமிளகாய் அரைத்த விழுது புளித்த மோர் தேவையான நீர் சேர்த்துக் கலக்கிக் கொதிக்க விடவும். நன்கு வெந்ததும் இறக்கி, இதனுடன் முதல் நாள் இரவே ஊற வைத்த ஜவ்வரிசியைக் கலக்கவும்.

வாழை இலை அல்லது மந்தார இலையை எடுத்துக் கொள்ளவும். இந்த மாவை கைகளில் வைத்து தட்டவும் (வாழை இலை என்றால், தேவைக்கேற்ற மாதிரி வெட்டி நன்கு படிய வைத்துக் கொள்ளவும். இலை வடாகம் போடுவதற்கேற்ற தட்டுகள் இருந்தால், இதையும் எடுத்துக் கொள்ளலாம்.) சிறிதளவு எண்ணெய் தடவி, ஆவியில் வேகவிட்டு எடுத்து, நன்கு காய விடவும். பிறகு பொரித்தெடுக்கவும்.

வரகு – பச்சை மிளகாய் வற்றல்!

சாமை – கறிவேப்பிலை வற்றல்