கிச்சன் கீர்த்தனா: கம்பு கிச்சடி

தமிழகம்

சிறுதானியங்களில் கம்பு நார்ச்சத்து மிகுந்த உணவு. வழக்கமாக கோடைக்காலத்தில் கம்பங்கூழ் செய்து பலர் சாப்பிடுவார்கள். கூழ் பிடிக்காதவர்களுக்கு இந்த கிச்சடி செய்து தரலாம். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு கம்பு பெஸ்ட் சாய்ஸ்.

என்ன தேவை?

உடைத்த கம்பு – ஒரு கப்
பச்சைப்பயறு – கால் கப்
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
இஞ்சித்துருவல் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு

எப்படிச் செய்வது?

உடைத்த கம்பு, பச்சைப்பயறை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். குக்கரைச் சூடாக்கி, நெய் ஒரு டேபிள்ஸ்பூன் விட்டு கிராம்பு, ஏலக்காய், பட்டை, இஞ்சித்துருவல் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வறுத்து வைத்திருக்கும் கம்பு, பச்சைப்பயறு சேர்த்துக் கிளறவும்.

இத்துடன் 3 கப் நீர் விட்டு கொதிக்க விடவும். உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி குக்கர் மூடியால் மூடவும். பிரஷர் வந்ததும், தீயை சிம்மில் வைத்து 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பிரஷர் அடங்கியதும், திறந்து மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறி சூடாகப் பரிமாறவும்.

வரகு வெந்தயக்கீரை புலாவ்

சாமை பெசரெட்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *