அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸின் பூர்வீக கிராமம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவிலுள்ள துலசேந்திரபுரம் கிராமம் ஆகும். நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த கிராமத்திலுள்ள தர்மசாஸ்தா கோவிலில் கமலா ஹாரீஸ் வெற்றி பெற சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. கமலாவுக்கு 5 வயதாக இருக்கும் போது, இந்த கிராமத்துக்கு வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இருந்து 330 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த கிராமத்தில் கமலா ஹாரீஸ் வெற்றி பெறுவார் என்று வாழ்த்தி கட்அவுட்டும் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த கோவில் கும்பாபிஷேகத்துக்கு கமலா ஹாரீஸ் நன்கொடையும் வழங்கியுள்ளார். நன்கொடை வழங்கியவர்கள் பட்டியலில் கமலா ஹாரீஸ் அவரின் தாத்தா பி.வி. கோபாலன் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.
இந்த கோவில் நிர்வாகி சுரேஷ் என்பவர் கூறுகையில், “நாங்கள் கமலாவின் வெற்றிக்காக சிறப்பு பூஜைகள் நடத்தி வருகிறோம். கண்டிப்பாக அவர் வெற்றி பெறுவார். வெற்றி பெற்ற பிறகு, அமெரிக்க ஜனாதிபதியாக அவரின் பூர்வீக கிராமத்துக்கு வருவார் என்று நம்புகிறோம்” என்கிறார்.
கமலா ஹாரீசின் தாத்தா பி.வி. கோபாலன் அந்த கிராம மக்களின் பெரும் மதிப்புக்குரியவர். பிரிட்டிஷ் இந்தியாவில் சிவில் சர்வீஸ் அலுவலராக பணியாற்றியுள்ளார். இந்த கிராமத்தில் பள்ளி தொடங்கியதும் இவர்தான். 1960 ஆம் ஆண்டு ஜாம்பியா நாட்டின் முதல் ஜனாதிபதியான கென்னத் கவுண்டாவுக்கும் ஆலோசகராக இருந்துள்ளார்.
அப்போதுதான், அமெரிக்காவில் கமலா ஹாரீஸின் தாயார் ஷியாமளா மருத்துவம் படித்துள்ளார். அங்கு, ஜமைக்கா நாட்டை சேர்ந்த ஹாரீசை காதலித்து மணந்தார். ஷியமளாவுக்கு சரளா, மகாலட்சுமி என்ற சகோதரிகளும் பாலச்சந்திரன் என்ற சகோதரரும் உண்டு. கமலாவுக்கு மாயா என்ற சகோதரியும் உண்டு .
கமலாவின் தாயார் இறந்த போது, கமலா ஹாரீஸ் தன் சகோதரி மாயாவுடன் சென்னை வந்து மெரினா கடற்கரையில் அஸ்தியை கரைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
24 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த அலைபாயுதே கார்த்திக் -சக்தி
பத்திரிகையாளர் ஓய்வூதியம்… நலவாரியக் கூட்டத்தில் முக்கிய முடிவு!
தலைப்புல “கோயில் கல்வெட்டுல பேருனு” போட்டுட்டு, உள்ள செய்தியில “கட்டவுட்டுல பேருனு” சொல்றது..