உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், சென்னையில் தயாரிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இட்லி கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட இந்திய வம்சாவளியான கமலாஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற வேண்டி கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோவில்களில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இட்லி இனியவன் தலைமையிலான தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கமலா ஹாரிஸ் உருவத்தை வடிவமைத்து 50 கிலோ எடையில் மெகா இட்லியை இன்று உருவாக்கியுள்ளனர்.
மேலும் இந்த இட்லியானது சென்னை கண்ணதாசன் நகரில் உள்ள சமையல் சங்க தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 11 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற மொத்தம் 270 தேர்தல் வாக்குகளை பெற வேண்டியது அவசியம்.
நண்பகல் 12 மணி நிலவரப்படி டிரம்ப் 247 தேர்தல் வாக்குகளில், கமலா ஹாரிஸ் 214 தேர்தல் வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவாரா என இட்லியுடன் பதைபதைப்பாக காத்திருக்கின்றனர் சமையல் தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அமெரிக்க அதிபர் தேர்தல் : விறுவிறுவென முன்னேறும் கமலா… ஆனால்!