மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் எதிர்சேவை இன்று (மே 4) நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா தொடங்கியது முதல் ஒவ்வோர் நாளும் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர்.
மதுரையின் அரசியாக ஏப்ரல் 30 அன்று மீனாட்சி அம்மனுக்கு முடிசூட்டும் விழா, மே 1 அன்று திக் விஜயம், மே 2 அன்று மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், மே 3 தேரோட்டம் என சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து நேற்று (மே 3) அழகர் மலையில் இருந்து கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மதுரைக்கு புறப்பட்டார்.
மதுரைக்கு வந்த கள்ளழகருக்கு மதுரை எல்லையில் எதிர்சேவை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்து கள்ளழகரை வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து மே 5-ல் அதிகாலை 3 மணியளவில் கருப்பணசாமி கோயிலில் உத்தரவு பெற்று ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருள்கிறார். அதனைத்தொடர்ந்து அதிகாலை 5.45 மணிக்குமேல் 6.12 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க உள்ளார்.
மோனிஷா
அதிபர் மாளிகை தாக்குதல்: புதினை கொல்ல உக்ரைன் முயற்சி!
PBKS vs MI: சூர்யகுமார், இஷான் கிஷான் அதிரடி… பஞ்சாப்பை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்