நகராட்சியுடன் தங்கள் கிராமத்தை இணைக்க மக்கள் எதிர்ப்பு: என்ன காரணம்?

Published On:

| By christopher

Kallathur annexing to Jayankonadam municipality

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் சுற்றியுள்ள சில கிராமங்களை இணைக்க அரசு முடிவெடுத்து, மக்களிடம் கருத்து கேட்க அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜெயங்கொண்டம் அடுத்த கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், ” கல்லாத்தூர் கிராமம், கீழகுடியிருப்பு ஊராட்சியில் உள்ளது. எங்கள் கிராமத்தில், அனைவரும் கூலிவேலை செய்து வருகிறோம். பலர் சென்னை, திருப்பூர், கேரளா என பிற பகுதிகளில் தங்கியும் கூலி வேலை செய்து வருகிறோம்.

இந்த நிலையில், கல்லாத்தூர் கிராமத்தை ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு இணைக்கப்பட்டால், குடிநீர் வரி, சொத்து வரி என அனைத்தும் உயர்த்தப்படும்.

100 நாள் வேலையும் பறிபோகும். மத்திய, மாநில அரசுகள் கிராமங்களுக்கு வழங்கும் இலவச வீடுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கிடைக்கப் பெறாமல் போகும்.

மேலும், எங்கள் கிராமத்துக்கு சொந்தமான வயல்பகுதிகள் அனைத்தும் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு, தற்போது தான் அவற்றை மீண்டும் எங்களுக்கு அரசு வழங்கியுள்ளது.

இதை சீரமைக்கக்கூட இயலாத நிலையில் வறுமையில் உள்ளோம். இந்த நிலையில் எங்கள் கிராமம் நகராட்சியுடன் இணைக்கப்பட்டால், குடிசையில் குடியிருக்கும் பெரும்பாலான மக்கள் குடிசை வீட்டிலேயே வாழ்நாளை கழிக்கும் சூழல் ஏற்படும்.

எனவே, எங்களது கிராமத்தை ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் இணைக்கும் அரசின் முடிவை கைவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : திமுக முப்பெரும் விழா முதல் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா வரை!

கிச்சன் கீர்த்தனா : கோதுமை இட்லி

ஸ்டாலின் செய்வது அநீதி : ராமதாஸ் காட்டம்!

கண்ணாடிய திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும் – அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share