கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதியின் உடற்கூறாய்வு ஆய்வறிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 22) தாக்கல் செய்தது ஜிப்மர் மருத்துவக்குழு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பள்ளி மாணவியான ஸ்ரீமதி, ஜூலை மாதம் 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இவரது, உடல் இரண்டு முறை கூறாய்வு செய்யப்பட்ட நிலையில் அதனை ஆய்வுசெய்ய நீதிமன்றம், ஜிப்மர் மருத்துவக்குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது.
உடற்கூறாய்வு அறிக்கையில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் தெரிவிக்கவே, இரண்டு உடற்கூறாய்வு அறிக்கைகளையும் மூன்று மருத்துவர்கள் கொண்ட ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, ஆகஸ்ட் 1ம் தேதி மாணவியின் இரண்டு உடற்கூறாய்வு அறிக்கைகளையும் சிபிசிஐடி போலீசார், ஜிப்மர் மருத்துவக் குழுவினரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், மாணவியின் இரு உடற்கூறாய்வு அறிக்கைகளையும் ஆய்வுசெய்த ஜிப்மர் மருத்துவக் குழுவினர் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 22) அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.
ஜெ.பிரகாஷ்
கள்ளக்குறிச்சி கலவரம் : சிறப்பு புலனாய்வு குழுவின் அடுத்தகட்ட டார்கெட் யார்?
காலாண்டு தேர்வு, தொடர் விடுமுறை அட்டவணை வெளியீடு!