கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏரிக்கரைக்குச் சென்ற 15 நபர்களை இன்று(ஆகஸ்ட் 16) வெறிநாய்கள் கடித்துள்ளன.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், சமீப காலமாகத் தெரு நாய்களின் தொல்லை அதிகமாகியிருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். சில இடங்களில் வெறிபிடித்த நாய்கள் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் உள்படத் தெருவில் செல்பவர்களைக் கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தெரு நாய்களின் தொல்லைகளைக் கட்டுப்படுத்த தமிழக அரசும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவந்த நிலையில்தான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெறி நாய்கள் சிறுவர்கள் உள்பட 15 நபர்களைக் கடித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் வட்டாரத்தில் உள்ளது வி.மாமந்துர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உள்பட 15 நபர்கள் காலைக் கடனை கழிக்க ஏரிக் கரைக்குச் சென்றுள்ளனர்.
ஏரிக் கரைக்குச் சென்ற இவர்களை அங்கிருந்த வெறிநாய்கள், துரத்தியதாக சொல்லப் படுகிறது. நாய்களிடமிருந்து தப்பிப்பதற்காக, ஓட்டம் எடுத்த 15 நபர்களையும் நாய்கள் கடித்ததாகச் சொல்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து காயம்பட்டவர்கள் சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சின்ன சேலம் ஒன்றிய துணைத்தலைவர் அன்புமணி மாறன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இது போலவே, இன்று கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே வெறிநாய்கள் 10க்கும் மேற்பட்டவர்களைக் கடித்துக் குதறியதால் , அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
‘தங்கலான்’ படத்தின் முதல் நாள் வசூல் இதோ !
செந்தில் பாலாஜி ED வழக்கு… சாட்சி விசாரணை தொடக்கம்!
விருதுகளை குவித்த ‘ஆடு ஜீவிதம்’! : ஆனால் ஏ.ஆர் ரகுமானுக்கு மட்டும்…