கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்த நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் காலனியை சேர்ந்த பலர் வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற உடல் உபாதைகளால் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜூன் 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் பாக்கெட் சாராயம் அருந்தியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 2 பெண்கள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கள்ளச்சாராயம் குடித்த 70க்கும் மேற்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜை காவல்துறையினர் நேற்று கைதுசெய்த நிலையில், கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டதாக இதுவரை ஜீவா, தனசேகரன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் மீது கொலை அல்லாத மரணம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அதன் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து சிபிசிஐடி ஐஜி அன்பு தலைமையிலான அதிகாரிகள், விசாரணை அதிகாரி கோமதி இன்று நேரில் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளியைப் பூட்டிய பெற்றோர்!
கிம்மை சந்தித்த புதின்: ஏன்? எதற்காக?