கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 17) தள்ளுபடி செய்தது.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் 19ஆம் தேதி கள்ளச்சாராயத்தை குடித்து 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 68 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன.
இந்த வழக்கில் கடந்த நவம்பர் 30ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இரண்டு வாரங்களில் வழக்குத் தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனு இன்று (ஜனவரி 17) விசாரணைக்கு வந்த போது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐ விசாரிப்பதில் என்ன தவறு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் பல அம்சங்களையும் அலசி ஆராய்ந்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா : கூட்டுக்குழுவுக்கு அனுப்ப ஒப்புதல்!