கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு!

Published On:

| By admin

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த 13ஆம் தேதி கடலூரை சேர்ந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு நடத்தி வந்த போராட்டம் இன்று (ஜூலை 17) கலவரமாக மாறியது. இந்நிலையில் உள்ளூர் போலீசார் மட்டுமின்றி, வெளிமாவட்ட போலீசாரும் பள்ளி முன்பு குவிக்கப்பட்டனர். அதிரடிப்படையினரும் விரைந்தனர். வஜ்ரா வாகனமும் வரவழைக்கப்பட்டது. போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

இந்நிலையில் மாணவி மரணத்தில் நடந்தது என்ன ? என்று சம்பவம் நடந்த பள்ளியில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மோனிஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel