கள்ளக்குறிச்சி செல்லும் தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம்!
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து ஜூலை 27ல் தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் விசாரணை நடத்தவுள்ளது.
சின்னசேலம் அருகே உள்ள கனியமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜூலை 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிபிசிஐடி போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று மாணவியின் எடைக்கு நிகரான பொம்மையைக் கொண்டு 3 மற்றும் 4ஆவது மாடியில் இருந்து தூக்கிப்போட்டு ஆய்வு செய்தனர்.
தடயவியல் துறை அதிகாரிகள் மாணவி கீழே விழுந்திருந்த இடம் மற்றும் சுவரில் ரத்தம் படிந்திருந்த இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து பள்ளியை சுற்றியும் ஆய்வு மேற்கொண்டனர்.
தற்போது மாணவியின் மரணம் குறித்து விசாரிக்க தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஜூலை 26 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளது. தமிழகம் வருகை தந்த அடுத்த நாளே (ஜூலை 27) விசாரணையை தொடங்கவுள்ளது.
மோனிஷா