கோவிலுக்கு செல்லும் முன் தான் கழற்றி போட்ட ஷூவை உதவியாளரிடம் எடுக்க சொன்ன மாவட்ட ஆட்சியரால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெறும்.
இதில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திருநங்கைகள் கூத்தாண்டவர் கோவிலுக்கு வருவது வழக்கம்.
இந்தாண்டு கூவாகம் கூத்தாண்டவர் சித்திரை கோவில் திருவிழா வரும் 18ம் தேதி சாகை வார்த்தல் சடங்குடன் துவங்குகிறது.
இதனை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இன்று (ஏப்ரல் 11) அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜதாவத் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன் ராஜ் ஆகியோர் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு சென்றனர்.
அப்போது கோயிலுக்குள் நுழைய முயன்ற ஆட்சியர் ஜதாவத் தனது ஹூவை கழட்டி போட்டு அதனை தனது உதவியாளரிடம் எடுத்து செல்லுமாறு கூறினார்.
வயதில் மூத்தவரான அந்த உதவியாளர் ஆட்சியாளரின் ஹூவை எடுத்து சென்றதைக் கண்ட அங்கிருந்த அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதற்கிடையே இச்சம்பவத்தின் வீடியோ, புகைப்படங்கள் வெளியான நிலையில், இதில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி: உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?
நண்பர் என்று சொன்னதிலேயே மகிழ்ச்சியடைந்தேன்: சசிகுமார் நெகிழ்ச்சி!