கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரை மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்க உள்ளது.
கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மிணி தேவி நுண் கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு நடன துணை பேராசிரியர் ஹரி பத்மன்,
சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் பாலியல் தொல்லை அளித்தாக மாணவிகள் கடந்த வாரம் கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் முன்னாள் மாணவர் ஒருவர் அடையாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் ஹரி பத்மன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
மாநில மகளிர் உரிமை ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.
மாநில மனித உரிமைகள் ஆணைய ஐஜி மகேந்திர குமார் ரத்தோர் தலைமையிலான குழு இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி 6 வாரங்களுக்குள் அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர்.
செல்வம்
அதிமுக பொதுச்செயலாளர்: அவகாசம் கேட்ட தேர்தல் ஆணையம்!
ரோகித் விக்கெட்டை வீழ்த்துவது சாதாரணம்…சிஎஸ்கே வீரர் விளக்கம்!
காஞ்சிபுரம் அர்ச்சகன் தேவநாதன், பாஜக ராகவன், சென்னைப் பள்ளி ஆசிரியர், ஒரு சாமியார் – இந்த லிஸ்ட்ல இதுவும் சேந்துருமோனு தோணுது…