கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகார் தொடர்பாக முன்னாள் டிஜிபி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில், அங்கு 2019 ஆம் ஆண்டு படித்த கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில், அந்த கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் போனை ஏரோபிளேன் மோடில் மாற்றி சென்னை மாதவரத்தில் உள்ள தோழியின் வீட்டில் பதுங்கி இருந்த ஹரிபத்மனை நேற்று(ஏப்ரல் 4) போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில் கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் டிஜிபி லத்திகா சரண் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கலாஷேத்ரா கல்லூரி அறக்கட்டளை தலைவர் தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மூன்று முக்கிய நபர்கள் அடங்கிய இந்தக் குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண், மருத்துவர் ஷோபா வரதாமான் ஆகியோர் இடம்பெற்றுள்ள்னர்.
கிறிஸ்டோபர் ஜெமா
’மூன்று நாட்களாக மிதக்கிறேன்’: சூரி உருக்கம்!
மயிலம் தேர் திருவிழா: முருகப்பெருமான் வீதியுலா!