கலாக்ஷேத்ரா பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரிபத்மன் இன்று (ஏப்ரல் 3) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டர்.
கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் பணிபுரியும் நடன துணைப் பேராசிரியர் ஹரிபத்மன், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநாத் ஆகிய நான்கு ஆசிரியர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நால்வர் மீது அக்கல்லூரியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஹரிபத்மன் மீது கடந்த மார்ச் 31 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே,பரதநாட்டிய நிகழ்ச்சிக்காக ஹைதராபாத்துக்கு மாணவர்களுடன் சென்றார் ஹரிபத்மன். அங்கே நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று(ஏப்ரல் 2)மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்குத் திரும்பினர் என்று போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்தன.
தலைமறைவான ஹரிபத்மனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சென்னையில் உள்ள நண்பர் வீட்டில் அவர் பதுங்கியிருந்ததை போலீசார் கண்டுபிடித்து இன்று(ஏப்ரல் 3) காலை கைது செய்தனர்.
இந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹரிபத்மனுக்கு, ஏப்ரல் 13 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி சுப்பிரமணியன். இதையடுத்து, புழல் சிறையில் ஹரிபத்மன் அடைக்கப்பட்டார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார்? சேவாக் ஓபன் டாக்!
பல்பிடுங்கிய சர்ச்சை : நெல்லை எஸ்.பி.காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!