கலைஞர் நூற்றாண்டு விழா: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

தமிழகம்

முன்னாள் முதலமைச்சர் கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 27ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

அருணை பொறியியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம் நடக்கிறது. திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 7,000-க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் தேர்ச்சி பெற்ற வேலைநாடுனர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

முகாம் அன்று தங்களுடைய நான்கு பாஸ்போர்ட்டு சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரி அல்லது https://forms.gle/NSVtGVHwEAECg9qF7 என்ற google படிவத்தில் பதிவு செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்று கொள்ளலாம். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

ராஜ்

டிஜிட்டல் திண்ணை: டிடிவி தினகரன் தேர்தலில் போட்டியிட தடையா?

படுக்கை… பாத்ரூம்…குடிநீர்… – அரசு மருத்துவமனைகள் அவலம் : பேடியின் ஆணை நிறைவேறுமா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0