கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் போட்டி இன்று (ஆகஸ்ட் 6) அதிகாலை 4 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.
கலைஞர் நினைவு நூற்றாண்டு மாரத்தான் போட்டியானது 5 கி.மீ, 10 கி.மீ, 21. கி.மீ, 42 கி.மீ என 4 பிரிவுகளில் நடைபெறுகிறது. இதில் 73,206 பேர் பங்கேற்கின்றனர். இந்த மாரத்தான் போட்டியை சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடத்திலிருந்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் துவங்கி வைத்தனர்.
மாரத்தான் போட்டியானது காமராஜர் சாலை, கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம், முத்துலெட்சுமி பார்க், பெசன்ட் நகர், இந்திரா நகர், ஓஎம்ஆர் சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை வழியாக நடைபெறுகிறது. 21 கி.மீ மற்றும் 41 கி.மீ பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
10 கி.மீ போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ15 ஆயிரமும் 5 கி.மீ போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது. மாரத்தான் போட்டியை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
செல்வம்
ஆடி கிருத்திகை: திருத்தணிக்கு 300 சிறப்புப் பேருந்துகள்!
33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!