மகளிர் உரிமைத் தொகை: தேர்வானவர்களுக்கு மெசேஜ்!

தமிழகம்

மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கி, விவரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு ஒவ்வொரு விண்ணப்பத்தையும் சரி பார்த்து வருகின்றனர். தகுதியான மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தப் பயனாளிகளுக்கு விரைவில் செல்போனில் மெசேஜ் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமை திட்டம் செப்டம்பர் 15ஆம்தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தது. இந்த விண்ணப்பங்களை குடும்பத் தலைவிகள் பூர்த்தி செய்து சிறப்பு முகாம்களில் கொடுத்தனர்.

முதற்கட்ட முகாமில் 80 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தனர். இரண்டாவது கட்ட பதிவும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் முதற்கட்ட விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் எவை எவை என்பதை கண்டறிய ஒவ்வொரு விண்ணப்பமாக ஆய்வு செய்யும் பணி  தொடங்கியுள்ளது.

இதற்காக பதிவு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் மின்னணு முறையில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற தகுதியானவர்கள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. அதை அடிப்படையாக வைத்து விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவரா? ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு கீழ் உள்ளவரா? 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் உள்ளதா? ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தி இருக்கிறார்களா? என்று கண்டறியப்பட்டு வருகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு உள்ளதால் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் அதனுடன் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர். இதில் தகுதியான மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த பயனாளிகளுக்கு விரைவில் செல்போனில் மெசேஜ் அனுப்பப்படும். அதை வைத்து பயனாளிகள் தெரிந்து கொள்ளலாம் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு கார அடை

குடியரசுத் தலைவருக்குத் தேநீர் விருந்தளித்த ஆளுநர்!

+1
16
+1
15
+1
13
+1
45
+1
20
+1
19
+1
15

57 thoughts on “மகளிர் உரிமைத் தொகை: தேர்வானவர்களுக்கு மெசேஜ்!

 1. எனக்கும் கூட இன்னும் விண்ணப்பம் வாங்கி கொண்டதற்கான message வரவில்லை

 2. எனக்கு உடனே மெசேஜ் வந்துவிட்டது

  1. சிலருக்கு மெசேஜ் வரும் சிலருக்கு வராது ஆகையால் யாரும் கவலைப்பட தேவையில்லை

   1. மெசேஜ் வரலைனா எப்படி நம்ம அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் தெரிஞ்சு கொள்வது?

  1. மெசேஜ் உங்கள் மகளிர் உரிமை தொகை விண்ணப்பத்தை நாங்கள் பெற்றுக் கொண்டோம் என்பதற்காகவே மெசேஜ் விண்ணப்பத்தை அளித்த அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்

 3. மெசேஜ் வராதவர்கள் என்ன செய்ய
  வேண்டும்

 4. Its really a good initiation. Let the scheme reach the people who are actually in need of it

Comments are closed.