மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
தமிழ்நாட்டில் செப்டம்பர் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் முதலில் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பயனாளர்கள் சேர்க்கப்பட்டனர். முதன்முறையாக விண்ணப்பித்தவர்களில் 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
மீண்டும் இரண்டாவது முறையாக விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டு 7.35 லட்சம் பயனாளிகள் சேர்க்கப்பட்டனர்.
இந்தநிலையில், உரிமைத் தொகை பெற தகுதியிருந்தும் விடுபட்டவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இன்று (டிசம்பர் 16) விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் யாரும் விடுபட்டுவிடக்கூடாது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
இது உதவித் தொகையாக அல்ல ,உரிமைத் தொகையாக வழங்குகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஜனவரி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா