அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் (சி.எஸ்.ஐ.ஆர்)இயக்குனராக மூத்த விஞ்ஞானி நல்லதம்பி கலைச்செல்வி பதவியேற்றார்.
ஆராய்ச்சி பயணத்தின் தொடக்கம்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த கலைச்செல்வி பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் பயின்றார். தமிழ் வழியில் பயின்றது கல்லூரியில் அறிவியல் கருத்துக்களை புரிந்து கொள்வதற்கு உதவியாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கலைச்செல்வி காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நுழைவு நிலை விஞ்ஞானியாக ஆராய்ச்சியில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
தமிழ்நாட்டில் லித்தியம், அயன் பேட்டரிகள் துறையில் தனது பணியின் மூலம் சிறந்து விளங்கியவர் நல்லதம்பி கலைசெல்வி. இவர் தற்போது, தமிழ்நாடு காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர்-ன் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.
ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்ற சேகர் மாண்டேவுக்குப் பிறகு கலைசெல்வி பதவியேற்றார். பயோடெக்னாலஜி துறையின் செயலாளர் ராஜேஷ் கோகலே மாண்டேவின் ஓய்வுக்குப் பிறகு இவருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டன.
இயக்குநராக பதவியேற்றார்.

இதனை தொடர்ந்து, தற்போது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் ( CSIR ) இயக்குனராக நியமிக்கப்பட்ட கலைச்செல்வி தமிழகத்தின் மூத்த விஞ்ஞானியாகவும் உள்ளார். நாடு முழுவதும் உள்ள 38 ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டமைப்பை வழிநடத்தும் முதல் பெண் விஞ்ஞானியாக திகழ்கிறார்.
மேலும் கலைச்செல்வி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறையின் செயலாளராகவும் பொறுப்பேற்கவுள்ளார். அவரது பதவிகாலம், பதவியை பொறுப்பேற்ற நாளிலிருந்து இரண்டு வருட காலத்திற்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை என்று பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கலைச்செல்வி மின்சார இயக்கத்திற்கான தேசிய இயக்கத்திற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கினார். அவர் 125-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் ஆறு காப்புரிமைகளையும் பெற்றுள்ளார்.
மோனிஷா
கத்திபாரா: வழிகாட்டி பலகை விழுந்ததில் ஒருவர் மரணம்!