காணும் பொங்கல்: வண்டலூர், கிண்டி பூங்காக்கள் திறப்பு!

தமிழகம்

காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்காக்கள் இன்று (ஜனவரி 17) திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையும், நேற்று மாட்டு பொங்கலும் கொண்டாடப்பட்டது.

பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளான இன்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலன்று பொதுமக்கள் அதிக அளவில் சுற்றுலா தளங்களுக்குச் சென்று தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவார்கள்.

சென்னையில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா மிக முக்கியமாக சுற்றுலா தளங்கலாகும்.

இன்று செவ்வாய்கிழமை, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா பராமரிப்பு பணிக்காக விடுமுறை அளிக்கப்படும். காணும் பொங்கலை முன்னிட்டு இன்று பூங்காக்கள் திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு இன்று பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் என்பதால் 20 டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்காவிற்கு 150 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும், காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று 15 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செல்வம்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.