கிச்சன் கீர்த்தனா: காடை பார்பிக்யு!

தமிழகம்

பார்பிக்யு உணவு வகைகளில் சிக்கன் பார்பிக்யு போன்று, காடை பார்பிக்யுவும் தற்போது பிரபலமாகி வருகிறது. இதை வீட்டிலேயே செய்ய ஆன்லைன் ஸ்டோர்களில், பார்பிக்யு சார்கோல்க் கிரில் அடுப்புகள் 700 ரூபாயில் இருந்து 2,500 வரையிலான விலைகளில் கிடைக்கின்றன. அதை வைத்து இந்த காடை பார்பிக்யுவை வீட்டிலேயே செய்து அசத்தலாம்.

என்ன தேவை?

காடை – 1
வெண்ணெய் – 100 கிராம்
மசாலா செய்ய…
வினிகர் – 4 டேபிள்ஸ்பூன்
டொமேட்டோ கெட்சப் – 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் மசாலா செய்யக் கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போன்று கலந்து வைக்கவும். இதை சுத்தம் செய்த காடையின் மீது நன்கு தடவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

பிறகு, பார்பிக்யு சார்கோல் அடுப்பில் கங்குகள் போட்டு, மேலே காடையை வைத்து இருபுறமும் அவ்வப்போது வெண்ணெய் தடவி 25 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். காடையை வேக வைக்கும் போது அதன் கால்களைக் கட்டிவிட்டு வேக வைக்கவும்.

இல்லையென்றால் அது தீயின் வேகத்தில் பிரிந்து சரியாக வேகமால் போய்விடும். பார்பிக்யு கிரில் அடுப்பு இல்லாதவர்கள் காடையை இரண்டாக நறுக்கி, தோசைக்கல்லில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காடையைச் சேர்த்து இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

கிச்சன் கீர்த்தனா: கிரில்ட் மீன்

கிச்சன் கீர்த்தனா: சிக்கன் பார்பிக்யு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *