சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக இன்று (செப்டம்பர் 24) பதவியேற்றனர். விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக பணியாற்றி வந்த மாவட்ட நீதிபதி ஜோதிராமன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த சூழலில் உயர் நீதிமன்ற புதிய தலைமை பதிவாளராக சென்னை முதன்மை அமர்வு நீதிபதியாக பணியாற்றி வரும் அல்லியை நியமித்து பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் உத்தரவிட்டுள்ளார்.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் ஆகியோர் மீதான வழக்குகளை விசாரித்து வந்தவர்.
இதேபோல கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட நீதிபதி அப்துல் காதர் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதித்துறை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்த எஸ்.கார்த்திகேயன் சென்னை பெருநகர முதன்மை அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதித்துறை பதிவாளராக பணியாற்றிய மாவட்ட நீதிபதி வேங்கடவரதன், சென்னை எம்.பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஐயப்பன் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஊழல் தடுப்பு பிரிவு கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு பதிவாளராக பணியாற்றிய மாவட்ட நீதிபதி சீதாராமன் சென்னை உயர்நீதிமன்ற நீதித்துறை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளராக பணியாற்றிய மாவட்ட நீதிபதி செல்வந்தன் உயர்நீதிமன்ற ஆய்வு பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
96 இயக்குநர் பிரேம்குமார் ஒரு சாடிஸ்ட் : தேவதர்ஷினி சொல்லும் காரணம்!
6 வயது சிறுமியை நம்பி காரில் அனுப்பிய தாய்… தலைமை ஆசிரியர் உருவில் இருந்த கயவன்!