highcourt chief register

பொங்கல் பரிசு: நீதிபதிகளுக்கு எச்சரிக்கை!

தமிழகம்

கீழமை நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் மூன்றாம் நபர்களிடமிருந்து பரிசுப் பொருட்களை வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

”தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில நீதிபதிகள், பண்டிகை காலங்களில் மூன்றாம் நபர்களிடமிருந்து பரிசுப்பொருட்கள், பட்டாசுப் பெட்டிகள், இனிப்புப் பெட்டிகளைப் பெறுவதாக பதிவுத்துறையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில நீதிபதிகளின் செயல்கள் மாநிலத்தின் ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் செயல்படும் அனைத்து நீதிபதிகளும் பரிசுப் பொருட்கள், பட்டாசுப் பெட்டிகள், இனிப்புப் பெட்டிகள் போன்றவற்றைப் பெறுவதைத் தவிர்க்க வேண்டும்.

நீதித்துறையில் பணிபுரியும் போது கடுமையான ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த அறிவுரைகளைக் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும் ஏதேனும் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்

மோனிஷா

இந்திய அணியின் அதிரடி பந்துவீச்சு: 215 ரன்களில் சுருண்ட இலங்கை

இந்திய கால்பந்து வீராங்கனைக்கு நேர்ந்த அவலம்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *