ஸ்ரீமதியின் செல்போனை கோபமாக வாங்க மறுத்த நீதிபதி உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே சிபிசிஐடி போலீஸிடம் ஒப்படைக்குமாறு கூறி அனுப்பினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.
மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பள்ளிக்கு எதிராக கலவரம் நடைபெற்றது. போராட்டக்காரர்களால் பள்ளி சூறையாடப்பட்டதால், பள்ளி மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், ஸ்ரீமதியின் செல்போனை சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இதுவரை ஸ்ரீமதியின் பெற்றோர் அந்த செல்போனை ஒப்படைக்கவில்லை. சிபிசிஐடி நான்கு முறை அளித்த சம்மனுக்கும் பதில் சொல்லாமல் இருந்துள்ளனர்.
இந்தநிலையில் இன்று(ஜனவரி 20) ஸ்ரீமதியின் தாயார் செல்வி வழக்கறிஞர் உடன் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் செல்போனை ஒப்படைக்க வந்தார்.
ஆனால் நீதிபதி புஷ்பராணி வெளியே போங்க, வாங்க முடியாது என்று கோபமாகக் கூறினார். மேலும் நீதிமன்ற உத்தரவுபடி சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தி அனுப்பினார்.
இதையடுத்து விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணை அதிகாரி தனலட்சுமியிடம், ஸ்ரீமதியின் தாயார் செல்வி செல்போனை ஒப்படைத்தார்.
கலை.ரா
நடிகை சனம் ஷெட்டி புகார் : விசாரணைக்கு உத்தரவு!
பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: டிஜிசிஏ அதிரடி நடவடிக்கை!
ஈரோடு தேர்தல்: புகார் தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை!