ஒப்பந்த தொழிலாளர்கள் 517 பேரை பணி நிரந்தரம் செய்ய உள்ளதாக என்.எல்.சி அறிவித்துள்ளது.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களாக நடத்தி வந்தனர்.
ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களுடன் என்.எல்.சி பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து மீண்டும் கடந்த 26 ஆம் தேதி தொடங்கிய தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.
இந்த நிலையில் மொத்தம் உள்ள 6,480 ஒப்பந்த தொழிலாளர்களில் 517 பேரை மூப்பு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய முடிவு செய்துள்ளதாக என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் மாறுபட்ட கருத்து இருந்தால் 7 நாட்களுக்குள் நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம் என்றும் என்.எல்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
நாளை இந்தியா கூட்டணி : இன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்த அமித்ஷா
இரண்டு ரவுடிகள் என்கவுன்டர்: டிஜிபி விளக்கம்!