ஆபரணத் தங்கம் விலை குறைவு!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 குறைந்துள்ளது.

மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி விலையை உயர்த்திய பிறகு ஆபரணத் தங்கம் விலையும் கூடியது.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் வரை 40,000 ரூபாயைத் தாண்டாத தங்கம் விலையில் டிசம்பர் தொடங்கிய உடனே ஏறுமுகம் கண்டது.

இந்தநிலையில், நேற்று(டிசம்பர் 5) சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.29 உயர்ந்து ரூ.5,045க்கும், சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.40,360க்கு விற்பனையானது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் அதிகரித்து ரூ.72.50க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று(டிசம்பர் 6) தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.40,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,010க்கு விற்பனையாகிறது.

இதேபோன்று சென்னையில் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,700 குறைந்து ரூ.70,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கலை.ரா

முதல்வரான பின் முதல் ரயில் பயணம்!

தாம்பரம்-வேளச்சேரி இடையே மெட்ரோ ரயில்?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *