ஜே.இ.இ தேர்வு: தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு!

தமிழகம்

ஜே.இ.இ தேர்விற்கு விண்ணப்பிக்கும் தமிழக மாணவர்கள் தங்களது 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களைப் பதிவிடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

என்ஐடி, ஐஐடி, உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்பதற்கு ஜே.இ.இ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

ஜே.இ.இ தேர்வு என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசாங்கம் மற்றும் மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தால் (CBSE) நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும்.

ஜனவரி 24 ஆம் தேதி தொடங்கும் முதல் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த 15 ஆம் தேதி முதல் ஆன்லைனில் பெறப்பட்டு வருகின்றன.

ஆனால், 2020-21 கல்வியாண்டில், கொரோனா பெருந்தொற்றின் விளைவாக ஊரடங்கு நடைமுறையில் இருந்த காரணத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படவில்லை.

பத்தாம் வகுப்பு படித்த அனைவரும் தேர்ச்சி பெற்றதாகத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையும் அறிவித்தது. அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி என்று சான்றிதழ் வழங்கப்பட்ட மாணவர்கள் 2023 ஆம் ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வை எழுத உள்ளனர்.

ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் அல்லது தரநிலை கேட்கப்படுகிறது. இதனால் தமிழக மாணவர்களுக்கு ஜே.இ.இ தேர்விற்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

ஆகவே பெருந்தொற்றுக் கால அவசரநிலையைக் கருத்தில்கொண்டு தமிழ்நாட்டு மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களைப் பூர்த்தி செய்யாமலேயே விண்ணப்பிக்கும் வசதி வேண்டும் எனத் தேசிய தேர்வு முகமையிடம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களைப் பதிவிடுவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது.

மதிப்பெண்களைப் பதிவிடுவதற்குப் பதிலாகத் தேர்ச்சி என்று மட்டுமே குறிப்பிட்டால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

அடி ராங்கியே ராங்கி : வைரலாகும் த்ரிஷா

ஜெய் ஷாவுக்கு எதிர்பாராத பரிசு கொடுத்த மெஸ்ஸி.. ரசிகர்கள் குழப்பம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *