ஜப்பானிய காடை வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நாளை (நவம்பர் 24) நடைபெறுகிறது. கலந்துகொள்ள விரும்புவோர் நேரடியாக வந்து பயிற்சியில் பங்கு பெறலாம் என்று கரூர், கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
காடை இறைச்சியும் முட்டையும் இப்போது இந்தியா முழுவதும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிது புதிதாக தொடங்கப்படும் காடைப் பண்ணைகளே இதற்கு சாட்சி. இந்தியாவில் பரவலாக வளர்க்கப்படும், அதிகம் பறக்க இயலாத தரைப்பறவை என்றால் அது ‘ஜப்பானிய காடை’தான்.
அநேகமாக, எல்லா பருவகாலச் சூழல்களிலும் நன்கு வளரும் இந்த ஜப்பானிய காடையின் இறைச்சியும் முட்டையும் சுவையானது மட்டுமின்றி சத்துகள் நிறைந்த உணவாகவும் இருக்கிறது. சிறிய அளவு எடையுள்ள, மிகக் குறைந்த வளர்ப்பு நாளையும், சிறிய இடத்திலும் வளர்க்க வாய்ப்பு உள்ள ஜப்பானிய காடை வளர்ப்பு, சிறிது சிறிதாக மக்கள் மனத்திலும், பண்ணையாளர்கள் மனத்திலும் இடம்பிடித்து வருகிறது.
இந்த நிலையில் கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே பாண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் ஜப்பானிய காடை வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நாளை (நவம்பர் 24) நடைபெறுகிறது.
ஒரு நாள் இலவச இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரடியாக கரூர், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், எண். 4/221, பாண்டுதாகரன்புதூர், மண்மங்கலம் விலாசத்தில் (தொடர்பு எண் தொலைபேசி: 04324-294335) காலை 10.30 மணிக்குள் வந்து பயிற்சியில் பங்கு கொள்ளுமாறு மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் அமுதா தெரிவித்துள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
சேரி மொழி: குஷ்பூவின் விளக்கமும்… குவியும் கண்டங்களும்!