வரும் ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த 2ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பை தமிழ்நாடு அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்த தொகுப்போடு ரூ.1000 ரொக்கமும் வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்போடு ரூ. 1000 வழங்கப்படும் என்றும், மாதம்தோறும் 15ஆம் தேதி வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை பொங்கலுக்கு முன்பே வரும் ஜனவரி 10ஆம் தேதி வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்தச்சூழலில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதுபோன்று நியாயவிலைக்கடைகள் மூலம் வரும் 10 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கப்படும். 13ஆம் தேதிக்குள் தொகுப்பைப் பெற முடியாதவர்கள் 14ஆம் தேதி அன்று பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
கலைஞர் 100 விழா: கிண்டியில் போக்குவரத்து மாற்றம்!
மிக கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?